இஸ்ரேல் ராணுவ பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலின் போது காசாவுக்கு தாய்லாந்தை சேர்ந்த ஒருவர் பிணைக்கைதியாக காசாவுக்கு கடத்திச் செல்லப்பட்டதாகவும், தற்போது அவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, பிணை கைதியாக கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட தாய்லாந்தை சேர்ந்தவரின் பெயர் நட்டாப்பாங்க் பின்டா. இவர் காசா எல்லைக்கு அருகே உள்ள நீர் ஓஸ் கிப்ட்டூஸ் என்ற சிறு சமூகத்தில் விவசாயியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த அக்டோபர் 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில், ஹமாஸ் அமைப்பினரால் அப்பகுதியில் இருந்த நான்கில் ஒரு பகுதியினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிலர் பிணைக்கைதிகளாக கடத்தப்பட்டுள்ளனர். அதில் பின்டா உயிருடன் கடத்தப்பட்டதாகவும் பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.

மேலும் பின்டாவின் உடல் முஜாஹிதீன் பிரிகேட்ஸ் என்ற பாலஸ்தீன ஆயுத குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துள்ளது எனவும், காசாவின் தெற்கு பகுதியான ரஃபா நகரில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டதாகவும் கார்ட்ஸ் தெரிவித்துள்ளார். தற்போது தாய்லாந்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.