இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது AI பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ரோபோ ஒன்று மனிதனுடன் பேட்மிட்டன் விளையாடும் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அட… இது புதுசா இருக்கே! மனிதர்களோடு பேட்மின்டன் விளையாடும் AI ரோபோட்#Badminton #AIRobot #Technology pic.twitter.com/6Gz34as2OD
— BBC News Tamil (@bbctamil) June 5, 2025
தவறுகள் செய்து அதன் மூலம் கிடைக்கும் அனுபவத்தை வைத்து சொந்தமாக முடிவெடுக்கும் Reinforcement Learning முறையில் இந்த ரோபோக்கள் செயல்படுகிறது. TTH நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ரோபோவை உருவாக்கியுள்ளனர். வேகமாக விளையாடும் போது இந்த ரோபோவுக்கு பின் இருக்கும் AI பார்வை, அசைவுகள் கைகளின் மீதான கட்டுப்பாடுகளை Shuttle Cock- ஐ பின்தொடர்ந்து அதனை சரியாக அடிக்க வைக்கிறது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
