கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டம் நெடுவத்தூரில், ஒரு பெண் கிணற்றில் குதித்த சம்பவம் பரிதாபமாக முடிவடைந்தது. உயிர் காக்கும் பணி மேற்கொண்ட தீயணைப்பு வீரர் உட்பட மூவர் உயிரிழந்தது, அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அர்ச்சனா என்ற பெண் நேற்று திடீரென வீட்டின் அருகே உள்ள சுமார் 80 அடி ஆழம் கொண்ட கிணற்றில் குதித்துள்ளார். இதற்கான தகவல் கொட்டாரக்கரை தீயணைப்பு நிலையத்துக்குத் தெரிவிக்கப்பட்டு, மீட்புப் பணிக்காக குழுவினர் விரைந்துள்ளனர். தீயணைப்பு அதிகாரியான சோனி எஸ். குமார், தன்னலமின்றி கிணற்றுக்குள் இறங்கிச் சிறப்பாக மீட்புப் பணியை முன்னெடுத்தார்.

ஆனால் அப்போது திடீரென கிணற்றின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து, கீழே இருந்த சோனி மற்றும் அர்ச்சனா மீது விழுந்தது. கூடவே, அருகில் நின்றிருந்த சிவகிருஷ்ணன் என்பவரும் சுவர் இடிந்ததில் கிணற்றுக்குள் விழுந்தார். உடனடியாக மற்ற தீயணைப்பு வீரர்கள் மூவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாலும், அவர்கள் மூவரும் பலத்த காயங்களால் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.