
தென்காசி சங்கரன்கோவில் அருகே பாட்டாத்தூரில் அய்யனார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு வினித் குமார் என்ற மகன் இருக்கிறார். இவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அய்யனார் இன்று வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார்.
அப்போது திடீரென மூட்டைகள் சரிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனது தந்தை இறந்த சோகத்திலும் 12-ம் வகுப்பு பொது தேர்வு மாணவன் வினித் குமார் எழுத சென்றுள்ளார். மேலும் வினித் குமாரின் கல்லூரி படிப்புக்கான செலவை பள்ளி நிர்வாகமே ஏற்றுக்கொண்டது.