நேபாள நாட்டின் சித்வான் தேசிய பூங்கா அருகே உள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் ஒன்று சாதாரணமாக உலா வரும் வீடியோ இணையத்தில் பரவி பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டில் வாழும் விலங்குகள் ஊருக்குள் நுழையும் போது மக்கள் அச்சமடைவது வழக்கம், ஆனால் இந்த வீடியோவில் அந்தப் பிரம்மாண்டமான காண்டாமிருகம் எந்த பயமும் இன்றி தெருக்களில் நடந்து செல்வதும், மக்கள் அதன் அருகே சென்று புகைப்படம் எடுப்பதும், ஒரு பெண் அதனைத் தொட்டுப் பார்ப்பதும் ஆச்சரியத்தை அளிக்கிறது.

 

அப்பகுதியில் உள்ள நாய்களும் கூட அந்த விலங்கைக் கண்டு அஞ்சாமல் குரைப்பதைக் காண முடிகிறது. காடுகளில் போதிய உணவு கிடைக்காதது மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பு போன்ற காரணங்களால் இது போன்ற வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வருவதாகவும், இத்தகைய ஆபத்தான விலங்குகளுடன் மக்கள் நெருங்கிச் செல்வது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.