அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தெருவில் நடந்து சென்ற சிறுவனை பிட்புல் ரக நாய் ஒன்று கொடூரமாகத் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை உறைய வைத்துள்ளது. அந்தச் சிறுவனை விடாமல் கவ்விப் பிடித்திருந்த நாயிடம் இருந்து மீட்டெடுக்க அவரது தாயும் அங்கிருந்த பொதுமக்களும் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது.

 

அந்த நாய் சிறுவனின் கழுத்து மற்றும் உடல் பகுதியை மிகத் தீவிரமாகத் தாக்கிய நிலையில், அங்கிருந்த ஒருவர் நாயின் கழுத்தை நெரித்துக் கட்டுப்படுத்திய பின்னரே சிறுவனை மீட்க முடிந்தது. உலகிலேயே மிகவும் ஆபத்தான நாய் இனமாகக் கருதப்படும் பிட்புல், அதன் வலிமையான தாடை மற்றும் விடாப்பிடியான தாக்குதல் குணத்திற்காக இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இணையவாசிகள், முறையாகப் பயிற்சி அளிக்க முடியாதவர்கள் இத்தகைய நாய் இனங்களை வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், நாயின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.