இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை ரேடார் முறை வான் தாக்கும் ஏவுகணையாகும். அந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது தொடர்பாக டி.ஆர்.டி.ஓ செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஒடிசா மாநிலத்தில் உள்ள கடலோரப் பகுதியில் இந்திய விமான படையுடன் டி.ஆர்.டி.ஓ இணைந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சுகோய் போர் விமானம் மூலமாக  அஸ்தரா ஏவுகணையை சோதனை செய்தது.  இரு வேறு திசைகளில் இருந்து ஆளில்லா விமானங்கள் அனுப்பப்பட்டன.

அதனை அஸ்தர ஏவுகணை துல்லியமாக குறி வைத்து தாக்கி அழித்தது. இது குறித்த தரவுகளை சந்திப்பு ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை மையம் மதிப்பீடு செய்தது. அந்த மதிப்பீட்டில் அஸ்தரா ஏவுகணை மிகச் சிறப்பாக செயல்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது இந்திய பாதுகாப்பு துறைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

மேலும் இந்தியா தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு புதிய மைல் கல்லை எட்டிருக்கிறது. மேலும் அஸ்தரா ஏவுகணை உருவாக்கத்தில் மத்திய பாதுகாப்புத்துறை மற்றும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மட்டுமல்லாமல் ஹிந்துஸ்தான் விமான நிறுவனம் உட்பட 50க்கும் மேற்பட்ட பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்காற்றி உள்ளன.

இதனை அடுத்து அஸ்தரா ஏவுகணை உருவாக்கத்திற்கும் அதனை வெற்றிகரமாக சோதனை செய்ய முயற்சியில் பங்கெடுத்த அனைத்து நிறுவனங்களுக்கும் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.