ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள ஃபக்கீர் மோகன் தன்னாட்சி கல்லூரியில் B. Ed படித்து வந்த ஒரு மாணவி, தன்னுடைய துறைத் தலைவர் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை தந்ததாக கூறி, கல்லூரி வளாகத்திலேயே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சிகர சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில், மாணவிக்கு 90% க்கும் அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவியின் உடல்நிலை தீவிரமாக இருப்பதால், சிறப்பு மருத்துவர்கள் குழு ஒன்று தயார் நிலையில் இருக்கிறது.
ओडिशा के बालेश्वर कॉलेज में छात्रा ने खुद को लगाई आग
◆ HOD समीर साहू पर यौन शोषण का आरोप
◆ प्रिंसिपल दिलीप घोष सस्पेंड, साहू गिरफ्तार#SexualHarassment | College Scandal | #Odisha pic.twitter.com/5h7aX89kpF
— News24 (@news24tvchannel) July 13, 2025
இந்த சம்பவத்திற்கு முன், மாணவி துறைத் தலைவர் சமீர் சாஹு மீது தொடர்ந்து பலமுறை புகார்கள் அளித்திருந்தார். உள் புகார் குழுவிலும், ஜூலை 1ஆம் தேதி போலீசாரிடமும் புகார் அளித்திருந்தபோதிலும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மாணவியின் வகுப்புத் தோழிகள் தெரிவித்ததாவது, “சமீர் சாஹு மாணவியிடம் தவறான கோரிக்கைகளை வைத்தார். அவற்றை மறுத்தால் ‘உன் கல்வி வாழ்க்கையை நாசமாக்குவேன்’ என மிரட்டினார்” என தெரிவித்துள்ளனர். இந்த அலட்சியமான அணுகுமுறையே மாணவியை இந்த நிலையில் தள்ளியுள்ளது என்பது பலரின் கருத்து.
இந்த நிலையில் கல்லூரி முதல்வர் திலீப் குமார் கோஷ் மற்றும் சமீர் சாஹு ஆகிய இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் சமீர் சாஹுவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளதாக பாலசோர் மாவட்ட எஸ்பி ராஜ் பிரசாத் தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு போலீஸ் குழு மற்றும் முக்கிய கல்வி அதிகாரிகள் அடங்கிய அரசு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவிக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக தற்போது எழுந்துள்ளது.
