இங்கிலாந்து திருச்சபையின் 1400 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக பெண்ணொருவர் பேராயராக நியமிக்கப்பட்டு, உலகளவில் கவனம் பெற்றுள்ளார். 63 வயதான சாராம் முல்லாலி, கேன்டர்பரி தேவாலயத்தில் இந்த உயர் பொறுப்பை ஏற்று, ஆங்ளிகன் சபையின் 106-வது பேராயராகப் பதவியேற்றுள்ளார்.

2018-ம் ஆண்டு முதல் லண்டன் ஆயராகப் பணியாற்றி வந்த இவர், கடந்த நவம்பரில் பேராயர் ஜஸ்டின் வெல்பி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இந்தப் பதவிக்கு ஜனவரியில் நடந்த தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

11 ஆண்டுகளுக்கு முன் சபையால் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தமே, பெண்ணான முல்லாலி இந்தப் பதவிக்கு வருவதற்கு வழிவகுத்தது.

சாராம் முல்லாலியின் பதவியேற்பு, ஆங்ளிகன் சபையின் 8.5 கோடிக்கும் மேற்பட்ட விசுவாசிகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் பேராயராக இருந்தபோது, ஒரே பாலின தம்பதிகளை ஆசீர்வதித்தது போன்ற முடிவுகளால் செய்திகளில் அடிக்கடி இடம்பிடித்தார். இதனால், அவரது நியமனம் சில சர்ச்சைகளையும், சலசலப்புகளையும் எழுப்பியுள்ளது.

இருப்பினும், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நியமனம், இங்கிலாந்து திருச்சபையில் பாலின சமத்துவத்தை மேம்படுத்தும் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.