நாசா விஞ்ஞானிகள் மற்றும் உலகளாவிய ஆராய்ச்சியாளர்கள் விண்வெளியில் தனித்து அலைந்து திரியும் ‘ரோக் பிளானெட்’ (rogue planet) என்று அழைக்கப்படும் “சா 1107-7626” என்ற கோளை 2008-ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர். இது ஏதேனும் நட்சத்திரத்தைச் சுற்றாமல், சமேலியான் (Chamaeleon) ராச்சியில் 620 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

வழக்கமாக கோள்கள் நட்சத்திரங்களைச் சுற்றி பொருட்களைச் சேர்த்து வளரும் என்று கருதப்பட்ட நிலையில், இந்தக் கோள் தனது சுற்று வட்டப் பாதையில் உள்ள தூசி, வாயு மற்றும் பொருட்களை வினாடிக்கு 60 கோடி டன் வேகத்தில் விழுங்கி வளர்ச்சி அடைந்து வருகிறது.

இது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது, ஏனெனில் இத்தகைய வேகமான வளர்ச்சி நட்சத்திரங்கள் உருவாகும் போது மட்டுமே காணப்படும்.

இந்தக் கோளின் தீவிர வளர்ச்சி அதன் காந்தப் புலத்தால் தூண்டப்படுவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர், இது இளம் நட்சத்திரங்களின் உருவாக்க செயல்முறையை ஒத்திருக்கிறது.

சில மாதங்களாக இதன் உள்வாங்கும் (accretion) விகிதம் 8 மடங்கு அதிகரித்து, வினாடிக்கு 60 கோடி டன் பொருட்களை விழுங்கி வருவதால், கோள் மற்றும் நட்சத்திரங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை மீண்டும் சிந்திக்க வைக்கிறது.

இந்தக் கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்லாகக் கருதப்படுகிறது, மேலும் விஞ்ஞானிகள் இதன் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.