
சென்னை புளியந்தோப்பில் 60 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் மாதவரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். தனியாக வசித்து வரும், இவர் கடந்த 15ம் தேதி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் 22 வயதான வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி கூச்சலிடவே அங்கிருந்த வாலிபர் தப்பி ஓடினார். இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.