உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி. ஆர். கவாய் மீது காலணியை வீசிய வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தில்லியின் கர்க்கர்டூமா நீதிமன்ற வளாகத்திற்குள் செருப்பால் தாக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத ஒரு நபர், வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரைச் செருப்பால் தாக்கும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.
அப்போது கிஷோர், “நீ யார்? சனாதன தர்மத்திற்கு ஜெய்” என்று கோஷமிட்டதோடு, அவருடன் வந்த ஒரு பெண்ணும் அந்த நபரைத் தாக்குவதை நிறுத்தும்படி கெஞ்சுவதும் கேட்கிறது. இந்தத் தாக்குதலுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றாலும், இது குறித்துப் பேசிய ராகேஷ் கிஷோர், “சுமார் 35 அல்லது 40 வயதுடைய ஒரு இளம் வழக்கறிஞர் செருப்பால் எங்களைத் தாக்கினார்.
हिंसा का जवाब हिंसा नहीं हो सकता है!
इनको पहचानिए! ये वही राकेश किशोर हैं जिन्होंने
पूर्व CJI जस्टिस गवई पर जूता फेंका था। ये तस्वीर
दिल्ली के कड़कड़डूमा कोर्ट परिसर की है। pic.twitter.com/XDFECWZK1p— Prabhakar Kumar Mishra (@PMishra_Journo) December 9, 2025
அவர்கள், தலைமை நீதிபதி மீது காலணி வீசியதற்குத் தண்டனை அளிப்பதாகக் கூறினர். மேலும் அவர் தலித் என்பதால் அவர் மீது காலணி வீசியதாகக் கூறினர். அதற்குப் பதிலடியாக நாங்களும் ‘சனாதன’ கோஷங்களை எழுப்பினோம்” என்று கூறியுள்ளார். இந்தத் தாக்குதலுக்கு மூலக் காரணம், அக்டோபர் 5 அன்று ராகேஷ் கிஷோர் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணியை வீச முயன்ற சம்பவம்தான்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள சேதமடைந்த விஷ்ணு சிலையை மீட்டெடுப்பது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, நீதிபதி கவாய், “நீங்கள் சென்று கடவுளிடமே கேளுங்கள்” என்று கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, கிஷோரும், “சனாதன தர்மத்தின் அவமானத்தை இந்தியா பொறுத்துக்கொள்ளாது” என்று சத்தமிட்டார்.
இந்தச் சம்பவத்தை பற்றிப் பேசிய முன்னாள் தலைமை நீதிபதி கவாய், தனது ஆறு மாதப் பதவி காலத்தின் ஒரு முக்கியமான நிகழ்வாக இதைப் பார்த்ததாகவும், இந்தச் சம்பவத்தை புறக்கணிப்பதே சரியான செயல் என்று உணர்ந்ததாகவும், தனது கடைசி நாளில் பத்திரிகையாளர்களிடம் கூறியிருந்தார். இது ஒரு மறக்கப்பட்ட அத்தியாயம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் காலணி வீச்சு சம்பவத்தை கண்டித்து அக்டோபர் 9, 2025 அன்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், ராகேஷ் கிஷோரின் உறுப்பினர் பதவியைத் தற்காலிகமாக நீக்கியதுடன், இந்திய வழக்கறிஞர்கள் மன்றமும் அவரது வழக்கறிஞர் உரிமத்தை இடைநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
