கர்நாடக மாநிலம், பெங்களூரு, கோரமங்களா (Koramangala) பகுதியில் உள்ள தவரெகெரே (Tavarekere) என்னும் இடத்தில், கடன் சுமை தாங்காமல் ஒரு தாய் மற்றும் பாட்டி, 14 வயதுச் சிறுவனைக் கொன்றுவிட்டுத் தற்கொலை செய்து கொண்டச் சோகச் சம்பவம் நேற்று (டிசம்பர் 8, திங்கள்) நடந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் 68 வயதுப் பாட்டி முதாம்மா (Muddamma), அவரது மகள் 38 வயது சுதா (Sudha), மற்றும் சுதாவின் 14 வயது மகன் மௌனிஷ் (Maunish) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏழாம் வகுப்புப் படித்து வந்த மௌனிஷுக்கு முதலில் விஷம் கொடுக்கப்பட்டு, பின்னர்த் தாயும், பாட்டியும் விஷம் அருந்தித் தற்கொலை செய்து கொண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் மூவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

கடன் சுமை மற்றும் தொழில் நஷ்டம் காரணமாகவே இவர்கள் இந்தத் துயர முடிவை எடுத்திருக்கலாம் என்றுத் தெரிய வந்துள்ளது. இது குறித்து எஸ்.ஜி. பாளையா (SG Palya) போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.