உத்தரப் பிரதேசம், அயோத்தியாவில் (Ayodhya, UP) நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்றுச் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வெளிநாட்டில் பணிபுரியும் கணவன் இருக்கும் நிலையில், மாமியார்-மாமனாருடன் வாழ்ந்து வந்த ஒரு திருமணமானப் பெண், தனது கள்ளக்காதலனை (Boyfriend) இரகசியமாகச் சந்தித்துள்ளார்.
சந்தேகம் கொண்ட மாமியார், மாமனார் ஆகியோர் அந்தப் பெண்ணின் அறைக்கதவைத் தட்டியபோது, அந்தப் பெண் தன் காதலனைக் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துள்ளார்.
अयोध्या: विवाहित प्रेमिका से मिलने पहुंचा प्रेमी बेड में छिपा, पकड़े जाने पर पति और ससुर ने कराई शादी, वीडिया सोशल मीडिया पर वायरल#Ayodhya | #ViralVideo pic.twitter.com/KG1pcD4mQY
— NDTV India (@ndtvindia) December 7, 2025
உறவினர்கள் கட்டிலைத் திறந்து பார்த்தபோது, உள்ளே ஒளிந்திருந்த காதலன் அலீம் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார். இந்தச் சம்பவம் நடந்த பிறகு, கணவரின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணுக்கு அவர் காதலனுடனேயே அதிரடியாகத் திருமணம் செய்து வைத்துள்ளனர். கட்டிலில் இருந்து காதலன் வெளியே வரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
