உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் நடந்த உதவி ஆசிரியர் நியமனத் தேர்வு (Assistant Teacher Recruitment Examination) ஒன்றில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. ஜலான் பகுதியைச் சேர்ந்த ரிது ஸ்ரீவஸ்தவா என்ற பெண் தேர்வாளர், சகேரியில் உள்ள கல்சா பெண்கள் இண்டர் காலேஜில் தேர்வு எழுத வந்தார். இவர் தேர்வு அறைக்குள் தனது உள்ளாடையில் (Undergarment) ஆண்ட்ராய்டு மொபைல் போனை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார்.
தேர்வு தொடங்கிய பிறகு, ரிது மொபைலை எடுத்து, வினாத்தாளைப் புகைப்படம் எடுத்து தனது உறவினருக்கு அனுப்பியுள்ளார். இதற்குப் பதிலாக, பதில்கள் அவருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. 9சந்தேகம் வராமல் இருக்க, ரிது அடிக்கடி கழிவறைக்குச் சென்று, அங்கு மொபைலில் வந்த பதில்களை கைகளில் எழுதிக்கொண்டு வந்து விடைத்தாளில் எழுதியுள்ளார். ஆனால், அவரது தொடர்ச்சியான சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளால், அறை கண்காணிப்பாளருக்கு சந்தேகம் ஏற்பட்டு,
அவர் பறக்கும் படைக்குத் தகவல் கொடுத்தார். பறக்கும் படையினர் வந்து சோதனை செய்தபோது, ரிதுவின் உள்ளாடையில் இருந்து மொபைல் ஃபோன் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்தப் பெண்ணிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், வாட்ஸ்அப் மூலம் பதில்களை அனுப்பிய அவரது உறவினரைத் தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
