பீகார் மாநிலம், பக்ஸர் மாவட்டத்தில் உள்ள பர்கா ராஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஜிதேந்திர சாஹ் என்ற ஸ்வீட் கடைக்காரருக்கு (Halwai) ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

தினசரிச் செலவுக்காகப் பணம் எடுக்கச் சென்றபோது, அவரது ஃபினோ வங்கி (Fino Bank) கணக்கில் முன்பு இருந்த ரூ.478-க்கு பதிலாக, ஒரே இரவில் ரூ.600 கோடி இருப்பு இருந்ததைக் கண்டு அவர் திகைத்துப் போனார்.

ரூ.600 கோடி வரவு வைத்த சில நிமிடங்களிலேயே, அவரதுக் கணக்கு உடனடியாக முடக்கப்பட்டது (Block). இதனால், 100 அல்லது 200 ரூபாய் கூட எடுக்க முடியாமல் ஜிதேந்திர சாஹ் தவிப்புக்கு ஆளாகியுள்ளார்.

இதுகுறித்து அவர் போலீஸாரிடம் புகார் அளித்தார். இந்தக் கணக்குக்கு இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது என்று வங்கி அதிகாரிகள் மற்றும் சைபர் நிபுணர்கள் குழுவினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது தொழில்நுட்பக் கோளாறு அல்லது சைபர் மோசடியாக இருக்கலாம் என்றுப் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.