கிராமப்புறங்களில் விவசாயிகள் வேலை செய்யும் போது பாம்பு தோன்றுவது புதுமையல்ல. ஆனால், சமீபத்தில் வெளிவந்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிர்ச்சி கிளப்பியுள்ளது.

https://www.instagram.com/reel/DP829RrEXre/?igsh=dmxteHc1YXppMW5w

வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விவசாயி ஒருவரின் முன் திடீரென நீல நிற நாகம் ஒன்று நிலத்திலிருந்து எழுந்துள்ளது. பாம்பு தன் தலையை நீட்டும் காட்சியைப் பார்த்த விவசாயி பயந்துபோய் சில அடிகள் பின்வாங்கியுள்ளார்.

அந்த பாம்பு சில நிமிடங்கள் அசையாமல் நின்று, பின்னர் மெதுவாக மரங்களின் திசையில் நகர்ந்து மறைந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பாம்பு பிடிப்போர் கூறுகையில், இத்தகைய நீல நிற நாகங்கள் மிக அரிதாகவே காணப்படும் எனவும், பெரும்பாலும் மழைக்காலம் முடிந்ததும் அல்லது காலநிலை மாற்றத்தின் போது தான் அவை வெளிவரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

கிராம மக்கள் இதுபோன்ற பாம்புகளை கொல்லாமல், உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிகழ்வின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. “இவ்வளவு அழகான நீல நாகம் உண்மையிலேயே இருக்கிறதா?” என நெட்டிசன்கள் ஆச்சரியமாகக் கருத்து தெரிவிக்கின்றனர்.

சிலர், “இது ஏ.ஐ. தொழில்நுட்பம் அல்லது ஃபில்டர் மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்” என சந்தேகம் தெரிவிக்க, மற்றோர் பகுதி “இது இயற்கையின் அதிசயம்” எனப் பெருமைப்பட்டுள்ளனர்.