சீனாவின் பிரபல பாடகர் லிங் சாவ் இரயில் நிலையத்தில் ரசிகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இரயில் நிலையத்தில் தன்னை மிக நெருக்கமாகப் படம் பிடித்த ரசிகர்களின் அலைபேசியைப் பறித்து எறிந்ததாகவும், ஒருவரின் ஆடையைப் பிடித்துத் தள்ளியதாகவும் அவர் மீது புகார்கள் எழுந்தன.
🔥 Ling Chao, do ONER, virou assunto após ser acusado de derrubar uma fã no aeroporto durante uma confusão por filmagens em close.
Ídolo ou não, quando o limite some, o debate deixa de ser fandom e vira responsabilidade.
Divulgação: Giagirl pic.twitter.com/oG8rAw0XuM
— DENNYS ALERTS (@Dennys_Alerts) December 30, 2025
இது குறித்து விளக்கம் அளித்துள்ள அவரது நிர்வாக நிறுவனம், லிங் சாவ் யாரையும் தாக்கவில்லை என்றும், நீண்ட நாட்களாகத் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் அத்துமீறி நுழைந்து தொல்லை கொடுத்து வந்த நபரின் அலைபேசியைப் பறிக்கும்போது தான் அந்தத் தடுமாற்றம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது. மேலும், சேதமடைந்த அலைபேசிக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு இருதரப்பிலும் சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும், எல்லை மீறும் ரசிகர்களால் பாடகர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
