தமிழக அரசியலை உலுக்கிய பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தற்போது மிக முக்கியமான திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேரின் ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு, இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஜாமீன் ரத்து செய்யப்பட்ட 12 பேரும் வரும் மார்ச் 6-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என நீதிபதிகள் கறாராக உத்தரவிட்டுள்ளனர்.

குற்றவாளிகள் வெளியே இருந்தால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட வாதங்களை ஏற்று நீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த உத்தரவு ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களிடையே ஒரு பக்கம் நிம்மதியைத் தந்தாலும், மறுபக்கம் சம்பந்தப்பட்டவர்களின் தரப்பில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.