தமிழகத்தின் தலைநகரான சென்னை, மருத்துவத் துறையில் மீண்டும் ஒருமுறை உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. சென்னை அப்போலோ மருத்துவமனை, ஒரே நாளில் மூன்று நபர்களுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்து இமாலயச் சாதனை படைத்துள்ளது.

இந்தச் சிகிச்சையில் மிக முக்கியமான மைல்கல்லாக, தானமாகப் பெறப்பட்ட உடல் உறுப்புகளைத் துரிதமாகவும், பாதுகாப்பாகவும் கொண்டு செல்ல வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு பிரத்யேகத் தனி மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.

சாலைப் போக்குவரத்தில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க எடுக்கப்பட்ட இந்த அதிரடி முடிவால், சரியான நேரத்தில் உறுப்புகள் கொண்டு வரப்பட்டு மூன்று உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

மருத்துவக் குழுவினர் மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இந்த ஒருங்கிணைந்த முயற்சிக்கு இப்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.