தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர் மகேந்திரன். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். விழா மற்றும் ரிப்பப்பப்ரி போன்ற படங்களில் மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடித்துள்ளார். இந்நிலையில் மாஸ்டர் மகேந்திரன் தற்போது மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரின் வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதாவது பெட்ரோல் பங்கில் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான மாற்றுத்திறனாளி ஒருவர் வேலை பார்க்கிறார். அவர் நடிகர் விஜயை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்று கூறுவதோடு இந்த வீடியோவை பார்த்து தளபதி என்னை நேரில் சந்தித்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் மகேந்திரனிடம் தெரிவித்துள்ளார். அதன் பிறகு அந்த மாற்றுத்திறனாளி ரசிகரின் செல்போன் கவரில் நடிகர் விஜயின் புகைப்படம் மற்றும் அன்புக்கு ஆயிரம் அர்த்தங்கள் நாங்கள் கண்ட முதல் அர்த்தம் தளபதி என்ற வாசகமும் அடங்கியுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.