ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் செயிண்ட் ஒன் கொலுசி (22). இவர் புகழ்பெற்ற கொரியன் பாப் பாடகர் கம் டான்சர் ஜிமின் போன்று இருக்க வேண்டும் என ஆசைப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளார். அவர் தன்னுடைய உடலில் 12 அறுவை சிகிச்சைகள் செய்ததால் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

அதன் பிறகு அவருடைய தாடை பகுதியில் பொருத்தியிருந்த சில பொருட்களை நீக்குவதற்கு மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப்போது நோய் தொற்று அதிகமாகி திடீரென மரணம் அடைந்தார். மேலும் அவரின் மரணத்திற்கு தற்போது திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.