ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கிம் கர்தாஷ்யன். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை கிம் கர்தாஷியன் போன்ற முக அமைப்பு வேண்டும் என்பதற்காக பிரபல ஹாலிவுட் மாடல் அழகியான கிறிஸ்டினா ஆஸ்டன் கோர்கானி பல பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார்.

இதனால் 32 வயதான நடிகை கிறிஸ்டினா மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மரணம் அடைந்துள்ளார். அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். நடிகை கிறிஸ்டினாவின் குடும்பத்தினர் அவருக்கு தவறான பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததால் தான் உயிரிழந்திருக்கிறார் என குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தற்போது கிறிஸ்டினாவின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்காக அவருடைய குடும்பத்தினர் நிதி திரட்டி வருகிறார்கள்.