தமிழ் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் இருப்பவர் பிரபுதேவா. இவர் தற்போது பிளாஷ் பேக் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை டான் சாண்டி இயக்கியுள்ள நிலையில், அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதன் பிறகு படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க நடிகைகள் ரெஜினா, அனுசுயா, உமா ரியாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இளம் வயது வாலிபர் ஒருவர் தன்னைவிட வயது மூத்த ஒரு பெண்ணை காதலிப்பது போன்று படத்தின் கதை உருவாகியுள்ளது. மேலும் இந்த டிரைலர் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.