
ஹைதராபாத் சேர்ந்த சிலர் வடகிழக்கு மண்டலமான சிக்கிமிற்க்கு சுற்றுலா சென்றுள்ளனர். சிக்கிமில் இயற்கை சூழல் மிகவும் அழகானதாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் பலரும் அங்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் ஜூலுக் பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணி அந்த வழியாக சென்று கொண்டிருந்த இரு சிறுவர்களை வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவில் இரண்டு சிறுவர்களும் அண்ணன், தம்பிகள். அந்தப் பெரிய சிறுவன் அங்கு உள்ள பயணிகளை பார்த்து எங்கிருந்து வருகிறீர்கள் என தனது இனிமையான குரலில் விசாரித்து உள்ளான். மேலும் தானும் இதே பகுதியை சேர்ந்தவன் எனக் கூறிவிட்டு சென்றுள்ளான்.
சிறிது தூரம் சென்றபின் திரும்பிப் பார்த்து அந்த சுற்றுலா பயணிகளிடம் மிட்டாய் வேண்டுமா? எனக் கேட்டான். அவர்கள் பதில் கூறுவதற்கு முன்பாகவே தனது கையில் இருந்த மிட்டாய்களை எடுத்து அவர்களுக்கு கொடுத்துவிட்டு பின்னர் கையை அசைத்து விட்டு அங்கிருந்து அண்ணன், தம்பி இருவரும் சென்று விட்டனர். இந்த அழகிய செயலை வீடியோவாக பதிவு செய்து இந்த சுற்றுலா பயணி வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் சிறுவனின் அன்பான செயல் மிகவும் அழகாக உள்ளது என கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram