தெலுங்கானா மாநில முதல்வர் ரேவேந்த் ரெட்டி சகோதரர் அனுமலா திருப்பதி ரெட்டி. இவர் சமீபத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். திருப்பதி ரெட்டி அரசு அதிகாரத்திலும் இல்லை, எம்பி, எம்எல்ஏ என எந்த ஒரு பதவியிலும் இல்லை. இந்த நிலையில் பள்ளிக்கூட விழாவிற்கு போலீஸ் பாதுகாப்பு வாகனத்தில் சென்றுள்ளார். அங்கு மாணவர்கள் பேண்ட் வாத்தியங்களுடன், சிறப்பு அணிவகுப்பு நடத்தி வரவேற்றனர். இதுகுறித்து பாஜக கட்சியினர் மற்றும் பி.ஆர்.எஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். பி.ஆர்.எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமராவ் இது குறித்து கூறியதாவது, தெலுங்கானாவில் ஒரே ஒரு முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இருந்தும் தெலுங்கானா அரை டஜன் முதல்வர்களை பெற்றுள்ளது என கேலி செய்யும் விதமாக கூறியுள்ளார். மேலும் “விகடபாத் முதலமைச்சர் திருப்பதி ரெட்டிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என விமர்சித்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது, இதில் “ஒரு பள்ளி நிர்வாகம் அதன் நிகழ்ச்சிகளுக்கு யாரை அழைக்க வேண்டும், எவ்வாறு வரவேற்க வேண்டும் என்பதை அந்த பள்ளி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும்” என பதிலளித்துள்ளது. சந்திரசேகர ராவ் முதலமைச்சர் பதவியில் இருந்த போது பல்வேறு விதிமுறை மீறல்களும் நடைபெற்றுள்ளன எனவும் குற்றம் சாட்டி உள்ளது.