திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நேற்று மாலை மர்ம நபர்கள் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் ரயில்வே போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு வாலிபரின் இடுப்பில் வைத்திருந்த அரிவாள் தரையில் விழுந்தது. இந்நிலையில் மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அரிவாளுடன் சுற்றித்திரிந்த மர்மநபர்கள் யார்? எதற்காக ஆயுதங்களை வைத்திருந்தனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரிவாளுடன் சுற்றி திரிந்த மர்ம நபர்கள்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!
Related Posts
இணைபிரியா நண்பன் செய்த துரோகம்…. கண்முன்னே கண்ட காரியம்…. கடைசியில் நேர்ந்த கொடூரம்…!!
திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (32) ஓசூரில் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது நண்பர் சரவணன் (35). இருவரும் இணைபிரியா நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் காளிதாஸின் மனைவி ரேவதிக்கும் சரவணனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த காளிதாஸ் அவர்களை எச்சரித்துள்ளார். மேலும் சரவணனின்…
Read more“யூடியூபில் வீடியோ”… வங்கியில் திருடுவது எப்படி…? பிளான் போட்ட எம்பிஏ பட்டதாரி…. தட்டித் தூக்கிய போலீஸ்….!!!
மதுரை மாவட்டத்திலுள்ள ஆரியப்பட்டி கிராமத்தில் லெனின் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்பிஏ முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்த நிலையில் ஊதியம் போதாததால் வேலையை விட்டு நின்றார். அதன் பிறகு சொந்த ஊருக்கு…
Read more