அரியலூர் மாவட்டத்தில் உள்ள ராங்கியம் பகுதியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆண்டிமடம் தாலுகாவில் இருக்கும் திருக்களப்பூர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விவசாயி இடம் கடன் பெறுவதற்கான படிவத்தில் கையெழுத்து போட செல்வி 1000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

இது தொடர்பான வீடியோவை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய உடையார்பாளையம் கோட்டாட்சியர் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் செல்வியை பணியிடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்ற வருகிறது.