இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஒரு ஆவணம் ஆகும். ஆதார் அட்டை அனைத்து விதமான அரசு மற்றும் அரசு சாரா அத்தியாவசியமான தேவைகளுக்கு முக்கியமான ஒரு ஆவணமாக மாறிவிட்டது. அதன் பிறகு நீங்கள் ஆதார் அட்டையை வைத்து ஒரு முக்கியமான செயல்முறையை செய்யும்போது உங்களுடைய மொபைல் எண்ணுக்கு ஓடிபி நம்பர் அனுப்பப்படும். ஒருவேளை உங்கள் மொபைல் நம்பருக்கு ஓடிபி நம்பர் வராவிட்டால் அது மிகப்பெரிய ஆபத்து. அதாவது உங்கள் ஆதார் அட்டையில் மற்றொரு மொபைல் எண் இணைக்கப்பட்டு இருக்கும். எனவே ஆதார் அட்டையில் எத்தனை மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளது என்பதை எப்படி தெரிந்துகொள்வது என்ற விவரத்தை தற்போது பார்க்கலாம்.

இதற்கு முதலில் tafcop.dgtelecom.gov.in என்ற இணையதள பக்கத்திற்குள் சென்று ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை உள்ளீடு செய்ய வேண்டும். அதன் பிறகு ஓடிபி என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் பதிவு செய்த மொபைல் நம்பருக்கு ஓடிபி நம்பர் வரும். அதன் பிறகு ஓடிபி நம்பரை பதிவிட வேண்டும். இதைத்தொடர்ந்து ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர்களின் விவரம் திரையில் தெரியும். மேலும் இதில் பயன்பாட்டில் இல்லாத செல்போன் நம்பர் மற்றும் உங்களுடைய செல்போன் நம்பர்கள் இல்லாவிடில் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும்.