டெல்லியில் எல்ஜி விகே சக்சேனா தலைமையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது காவல்துறையை மேம்படுத்துவதற்கு 3,000 பெண்கள் உட்பட 6,000 பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு காவல்துறையை மேம்படுத்த பெண் காவலர்களின் முக்கியத்துவம் குறித்தும் பேசப்பட்டது.

இதைத்தொடர்ந்து காவல்துறையை மேம்படுத்த பெண்கள் பாதுகாப்பு பிரச்சினைகளை கையாளுதல், நீதிமன்ற கட்டிடங்களை விரைவுப்படுத்துதல், தெருவிளக்குகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் டெல்லி நகரில் 1046 தெரு விளக்குகள் எரியாமல் இருப்பதாகவும், தெருவிளக்குகளை பழுது பார்க்கும் பணியை ஒரு மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.