இனிமேல் ரேஷன் அட்டை இன்றி சர்க்கரை, கோதுமை, அரிசி போன்றவற்றை ஈஸியாக பெற்றுக்கொள்ளலாம். அதாவது, உத்தரபிரதேச யோகி அரசாங்கம் குடும்பங்கள் அரசு திட்டங்களை அணுகுவதை எளிதாக்குவதற்காக “குடும்ப ஐடி – ஏக் பரிவார் ஏக் பெஹ்சான்” எனும் ஆன்லைன் போர்ட்டலை துவங்கியுள்ளது. யோகி அரசின் போர்டல் https://familyid.up.gov.in, ரேஷன் கார்டுகள் இல்லாத மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்திற்கு தகுதிபெறாத குடும்பங்களுக்கு இலவச (அ) மலிவான ரேஷன் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.

இந்த போர்ட்டலின் உதவியுடன் குடும்பங்கள் தங்களது அடையாள அட்டையை உருவாக்கி, இதன் வாயிலாக அவர்கள் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த யோகி அரசின் குடும்ப ஐடி-ஒரு குடும்பம் ஒரு அடையாளம்” போர்டலானது ரேஷன் அட்டைகள் இல்லாத குடும்பங்களுக்கு இலவசம்(அ) மலிவான ரேஷன் வழங்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது.