தமிழகத்தில் கோயில் திருவிழாக்களின் போது பாரம்பரியமாக நடத்தப்படும் சேவல் சண்டைகளுக்குத் தடை விதித்து காவல் துறை தலைமை இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டிஜிபி வெளியிட்ட இந்தத் தடையை எதிர்த்தும், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள திருவிழாக்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரியும் ஈரோட்டைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் எழுப்பிய அதிரடி வாதங்கள் மாநிலம் முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், காவல்துறையினருக்கு சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு உள்பட எவ்வளவோ முக்கியப் பணிகள் இருக்கும் நிலையில், எங்கு ஆடு சண்டை மற்றும் சேவல் சண்டை நடக்கிறது என்பதைத் தேடிப் பிடித்துக் கண்காணிப்பது மட்டும்தான் காவல்துறையின் வேலையா? என்று காட்டமாக வினவினர்.
மேலும், இதுபோன்ற பாரம்பரிய விளையாடுகளுக்குத் தடை விதித்து சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபிக்கு என்ன சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தடையின் பின்னணி மற்றும் அதற்கான சட்ட விதிகள் குறித்து உரிய விளக்கமளிக்குமாறு காவல் துறை டிஜிபி மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற திருவிழாக்களில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் சேவல் சண்டைகள் குறித்த இந்த வழக்கு, சமூக மற்றும் சட்ட வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதித்து சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம் உள்ளது
சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதித்து காவல்துறை டிஜிபி கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பரில் சுற்றறிக்கை பிறப்பித்திருந்தார்.
ஈரோடு,நாமக்கல்… pic.twitter.com/rS6n39NU7r
— Manikandan Sankar (@reportermani) September 1, 2026
“>
மனுதாரரின் கோரிக்கை மற்றும் டிஜிபி தரப்பில் அளிக்கப்பட உள்ள பதிலின் அடிப்படையில், சேவல் சண்டை தடையின் மீது நீதிமன்றம் விரைவில் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
