பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 28 வயது சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர் மனஜீத் கவுர், கடந்த ஜூலை 3-ஆம் தேதி இரண்டு பேரால் கடத்தப்பட்டு ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.
அதன்பிறகு அந்தப் பெண்ணை ஒரு மரத்தில் கட்டிவைத்து உயிருடன் எரித்துள்ளனர்; அந்தச் சமயத்தில் அவர் கர்ப்பமாக இருந்ததும், ஏற்கனவே அவருக்கு 7 வயதில் ஒரு மகன் இருப்பதும் தெரியவந்துள்ளது.
தீயில் எரிந்துகொண்டிருந்த அவரை அந்த வழியாக வந்த பெண் ஒருவர் கம்பளி போர்த்தி காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக உயிருக்குப் போராடி வந்த அவர் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தத் கோரச் சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும், இதுவரை பஞ்சாப் காவல்துறையினர் குற்றவாளிகள் எவரையும் கைது செய்யவில்லை எனக் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மாநிலத்தில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசாங்கத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
மேலும், மாநிலத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்துவிட்டதாகவும், சட்டம்-ஒழுந்தைக் காக்கத் தவறிய அரசு நாட்டின் பிற பகுதிகளைத் திருத்த நினைப்பதற்கு முன்பு தன் மாநிலத்தைக் கவனிக்க வேண்டும் என்றும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
பெண் ஒருவர் மனிதாபிமானமற்ற முறையில் உயிரோடு எரிக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.
கேக்கவே கொடூரமா இருக்கு🙄
28 வயதான சோசியல் மீடியா influncer மனஜீத் கவுர்..
கடந்த மாதம் july 3 ஆம் தேதி ரெண்டு பேரால் கடத்தபடறாங்க..ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கூட்டிட்டு போய் தாக்கப்படறாங்க..
அப்றம் நடந்தது தான் நம்பவே முடியாத சம்பவம்..😰ஒரு மரத்தில் கட்டி வெச்சு..அந்த… pic.twitter.com/k9kca5Gl1Y
— Sona🐾🇮🇳 (@sona_sebin) August 31, 2026
“>
சட்டம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசாங்கம் இந்த விஷயத்தில் மெத்தனமாக இருப்பது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் எப்போது கைது செய்யப்படுவார்கள் என்ற கேள்வியுடன் இந்தச் சோகச் சம்பவம் தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
