உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது பிளஸ்-ஒன் பள்ளி மாணவி ஒருவர், தேசிய தலைநகர் பிராந்தியத்தில் இயக்கப்பட்ட ஓடும் ஸ்லீப்பர் பேருந்துக்குள் வைத்து கொடூரமான கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி இரவு காஷ்மீரி கேட் பகுதியில் அரங்கேறிய இந்தச் சோகச் சம்பவம் தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டைவிட்டு வெளியேறிய அந்த மாணவி, நொய்டாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் செல்ல முயன்றுள்ளார்.

அப்போது பெய்த கனமழை மற்றும் இருள் காரணமாக பரி சவுக் பகுதியில் தவறாக இறங்கிவிட்ட அவர், பேருந்துக்காகக் காத்திருந்த போது அவ்வழியாக வந்த அந்த ஸ்லீப்பர் பேருந்தைக் கை காட்டி நிறுத்தியுள்ளார்.

தாங்கள் நொய்டா செக்டர்-63 பகுதிக்குச் செல்வதாகக் கூறி பேருந்தில் ஏற்றிய ஓட்டுநர் குல்தீப் மற்றும் நடத்துநர் சந்தீப் ஆகியோர், மாணவி தனியாக மாட்டிக் கொண்டதைச் சாதகமாகப் பயன்படுத்தி இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 47 கிலோமீட்டர் தூரம் வரை நகருக்குள் இயக்கப்பட்ட அந்தப் பேருந்தில், ஜன்னல் திரைகளால் மறைக்கப்பட்டிருந்த ஸ்லீப்பர் படுக்கை வசதியைப் பயன்படுத்தி நயவஞ்சகர்கள் இந்தத் குற்றத்தை அரங்கேற்றியுள்ளனர்.

அதன்பிறகு காஷ்மீரி கேட் பேருந்து நிலையம் அருகே மாணவியை இறக்கிவிட்டுத் தப்பிய குற்றவாளிகள், பின்னர் திமார்பூர் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பதுங்கியிருந்த போது டெல்லி காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.

“>

 

மேலும், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஸ்லீப்பர் பேருந்து பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.