மும்பை போக்குவரத்து காவல்துறை பயன்படுத்தும் ‘இ-சலான்’ அபாரத இயந்திரத்தைப் போன்ற ஒரு கருவியை, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கையாளும் காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கருவியின் உண்மையான உரிமையாளர் யார், அது எப்படி ஓர் ஆட்டோ ஓட்டுநரின் கைக்குக் கிடைத்தது என்பது குறித்துச் சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

வைரலாகும் 22 விநாடி காணொளியில், அபராதம் விதிக்கப் பயன்படுத்தப்படும் சலான் கருவியைப் பிடித்துக்கொண்டு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் நடந்து வருகிறார். பின்னர், அந்த சாதனத்தைக் கேமராவிற்கு அருகே கொண்டு வந்து மற்றொரு நபரிடம் கொடுப்பது தெளிவாகப் பதிவாகியுள்ளது.

இந்தச் சாதனம் குர்லா போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த போக்குவரத்துக் காவல் அதிகாரி ஒருவருக்குச் சொந்தமானது என்று தகவல்கள் பரவி வருகின்றன. எனினும், இந்தக் கூற்றின் உண்மைத்தன்மை குறித்தும், காணொளி பதிவு செய்யப்பட்ட பின்னணி குறித்தும் சுயாதீனமாகச் சரிபார்க்கப்படவில்லை.

சமூக ஆர்வலர் மன்சூர் ஷேக் என்பவர் இக்காணொளியைத் தனது ‘X’ பக்கத்தில் பகிர்ந்து, மும்பை போக்குவரத்து காவல்துறையின் அதிகாரப்பூர்வக் கணக்கையும் டேக் செய்துள்ளார். காவல்துறையினரின் அதிகாரப்பூர்வச் சாதனங்கள் இவ்வளவு எளிதாகத் தனிநபர்களின் கைக்கு மாறுவது குறித்துப் பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

Serious concern in Kurla Traffic Division 🚨

The e-Challan machine officially issued to Traffic Constable Dev Kamble is allegedly being carried and used by auto-rickshaw drivers.

Mumbai Traffic Police pls investigate this matter and take appropriate action. @MTPHereToHelp pic.twitter.com/CpqXDRsmGT

— Mansoor Shaikh (@ShaikhMansoor83) August 29, 2026

“>

காணொளியில் இருப்பது நிஜமான இ-சலான் இயந்திரமா அல்லது அது போன்ற தோற்றமுடைய வேறு சாதனமா என்பது குறித்து மும்பை காவல்துறையினரிடமிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஒருவேளை அது காவல்துறையின் அதிகாரப்பூர்வ கருவி என உறுதி செய்யப்பட்டால், உரிய விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.