சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வைரல் காணொளி அனைவரையும் வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக விஷப்பாம்புகளைப் பிடிக்கக் கொக்கிகள், இடுக்கிகள் மற்றும் பிரத்யேகப் பெட்டிகளைப் பயன்படுத்துவதையே நாம் பார்த்திருப்போம். ஆனால், நபர் ஒருவர் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, சாதாரண பிவிசி குழாயை மட்டும் பயன்படுத்தி ஒரு பெரிய நாகப்பாம்பைப் பிடிக்கும் சாகசச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
@earth_tracker என்ற எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்தக் காணொளியில், செங்கல் சுவரில் படமெடுத்து ஆக்ரோஷமாகச் சீறும் பெரிய நாகப்பாம்பு ஒன்று காட்டப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு வரும் நபர், ‘L’ வடிவ முழங்கை இணைப்பு பொருத்தப்பட்ட வெள்ளை நிற பிவிசி குழாயை நாகத்தின் தலைக்கு அருகில் மிக அமைதியாகக் கொண்டு செல்கிறார்.
பாம்பின் சீற்றம் மற்றும் மூச்சுவிடும் சத்தம் கேட்கும் அந்த ஆபத்தான சூழலில், தனது சாதுரியத்தால் அந்த நாகத்தின் தலையை நேராகக் குழாய்க்குள்ளே புகுத்தி, பாம்பு முழுவதையும் லாவகமாக உள்ளே இழுத்துப் பிடிக்கிறார். இந்தச் சாகசக் காணொளி இணையத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் அந்த மனிதனின் தைரியத்தைப் பாராட்டி வருவதுடன், கலக்கமான வேடிக்கையான கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
“சகோதரா, சொர்க்கத்திலிருந்து பல மிஸ்டு கால் வந்திருக்கும் பாருங்க” என்று ஒரு பயனர் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிலர் பாம்பின் பயங்கரமான மூச்சுவிடும் ஒலியைக் கண்டு தாங்களும் அதிர்ந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
இருப்பினும், இந்தியாவில் மிகவும் விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளில் ஒன்றான நாகப்பாம்பைப் பிடிப்பதில் இப்படிப்பட்ட ஆபத்தான முறைகளைப் பின்பற்றுவது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்று வனத்துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
See how easily he catches a full-grown dangerous cobra with just a PVC pipe 🐍🔥 pic.twitter.com/ZpzFKhp54b
— Earth_Wanderer (@earth_tracker) August 21, 2026
“>
மக்கள் யாரும் இதுபோன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபட வேண்டாம் என்றும், வீடுகளிலோ அல்லது அருகில் பாம்புகளைக் கண்டால் உடனடியாகத் தகுந்த பயிற்சி பெற்ற பாம்பு மீட்புக் குழுவினரையோ அல்லது வனத்துறையினரையோ தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
