மேற்கு வங்க மாநிலம், மல்டா மாவட்டம் பாமங்கோலா பகுதியில் உள்ள ஜக்தலா உயர்நிலைப் பள்ளியில் (நடைபெற்ற ஒரு சம்பவம், கல்வி நிலையங்களில் நடக்கும் வன்முறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. பள்ளி மாணவர்களுக்கும் பெண் ஊழியருக்கும் இடையே சான்றிதழ் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு முற்றி, கைக்கலப்பாக மாறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பள்ளியில் ஒன்றரை ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் பெண் நிர்வாக ஊழியரிடம், முன்னாள் மாணவர் ஒருவர் தனது பெயரில் உள்ள எழுத்துப்பிழையைத் திருத்திவிட்டு புதிய மாற்றுச் சான்றிதழ் (TC) வழங்குமாறு கோரியுள்ளார். ஆனால், அதிகாரப்பூர்வ பள்ளிப் பதிவேடுகளின்படி மட்டுமே ஆவணங்களை வழங்க முடியும் என்பதால் அந்த ஊழியர் சான்றிதழ் வழங்க மறுத்துள்ளார்.
Students assault lady teacher in Malda, Bengal over TC. Police order probe.
Teacher said the student’s name was incorrectly recorded in the school’s records, because of which she refused to issue the TC.
“We should be protected” : TEACHER
pic.twitter.com/YWMyZpVh7D— News Algebra (@NewsAlgebraIND) August 22, 2026
இதனால் ஆத்திரமடைந்த சில மாணவர்கள் திடீரென ஆசிரியர் அறைக்குள் நுழைந்து அந்தப் பெண் ஊழியரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்குப் பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியர் அமித் ஹால்டர் மற்றும் மற்றொரு ஆசிரியர் உடந்தையாக இருந்ததாக அந்த ஊழியர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. காயமடைந்த அவர் உடனடியாகப் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி ஊழியர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்வினையாக, அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனைக்குத் திரண்டு வந்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த பொறுப்புத் தலைமை ஆசிரியரையும் மற்றொரு ஆசிரியரையும் அவர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனை வளாகத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காகக் காயமடைந்த பெண் ஊழியர் வெகு ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மேலும் அவர் சில ஆசிரியர்கள் மீதும் காவல் துறையில் கூடுதல் புகார்களை அளித்துள்ளார்.
