தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக மூத்த தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகளையும் சட்டப்பேரவை நிகழ்வுகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

​நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் சார்பில் கேள்வி எழுப்பினால், அதற்கு உரிய பதில் அளிக்கப்படுவதில்லை. ஒரு நான்கு அமைச்சர்கள் பதிலளிக்க எழுவார்கள். ஆனால், அவர்கள் பேசுவது கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலாக இருக்காது; மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கத்தில்தான் அவர்களின் பதில்கள் அமைகின்றன” என்று சாடினார்.

​மேலும் தொடர்ந்து பேசிய அவர், “அவர்களுக்குத் தேவையெல்லாம் சோசியல் மீடியாவில் பதிவிட நான்கு ரீல்ஸ்கள் மட்டுமே. உண்மையான மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. இவர்கள் மாநிலத்தில் ஒரு சர்க்காரை நடத்துகிறார்களா அல்லது சர்க்கஸ் கம்பெனியை நடத்துகிறார்களா என்ற கேள்விதான் மக்கள் மனதில் எழுகிறது” எனக் காட்டமாகத் தெரிவித்தார்.

​தஞ்சை திருமண விழாவில் தவெக அரசை குறிவைத்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய இந்த காரசாரமான பேச்சு, தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருவதோடு தமிழக அரசியல் களத்திலும் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.