முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் திமுகவை வீழ்த்தவே அதிமுகவைத் தொடங்கினர் என்றும், ஆனால் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திமுகவை முழுமையாக ஒழித்துவிட்டார் என்றும் தவெக அமைச்சர் நிர்மல்குமார் அதிரடியாகப் பேசியுள்ளார்.
மதுரையில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், “திமுக என்ற கட்சி இனி மீண்டும் மீண்டு வர முடியாத அளவுக்குத் தலைவர் விஜய் அதை வீழ்த்தியுள்ளார். இனிமேல் அண்ணா அறிவாலயத்திற்கு வெள்ளையடித்து வாடகைக்குத்தான் விட வேண்டும்” என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “வரும் 5 ஆண்டுகளில் மக்களுக்கான நேர்மையான ஆட்சியில் மிகப்பெரிய மாற்றத்தை தமிழக வெற்றிக் கழகம் கொண்டு வரும். தற்போதைய எதிர்க்கட்சியினரிடம் ஊழல் மற்றும் கட்சி நிதி குறித்துக் கேள்வி எழுப்பினாலே அவர்களுக்குக் கடுமையான கோபம் வருகிறது” எனக் சாடினார்.
மதுரை பொதுக்கூட்டத்தில் தவெக அமைச்சர் நிர்மல்குமார், திமுக மற்றும் எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து ஆற்றிய இந்த காரசாரமான பேச்சு, தற்போது சோசியல் மீடியாவில் தீயாகப் பரவி வருவதுடன் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
