தமிழகத்தில் தற்போதைய தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளதாகவும், குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தவெகவைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர் என்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தின் தற்போதைய நிலவரம் மற்றும் சட்டமன்றச் செயல்பாடுகள் குறித்துக் கூறுகையில், “திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகிறது. மாநிலத்தில் தொடர்ந்து நடைபெறும் பல்வேறு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலானோர் தவெக கட்சியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.
மேலும் தொடர்ந்து சட்டமன்ற நிகழ்வுகள் குறித்துப் பேசிய அவர், “மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காகச் சட்டமன்றத்தைக் கூட்டுவதை விடுத்து, தற்போதெல்லாம் வெறும் சோசியல் மீடியாவில் பதிவிடும் ரீல்ஸ்காகவே சட்டமன்றம் நடத்தப்படும் அவலநிலை உருவாகியுள்ளது” எனக் காட்டமாகக் விமர்சித்தார்.
தவெக அரசின் செயல்பாடுகளையும் சட்டமன்றத்தில் ரீல்ஸ் போடும் கலாச்சாரத்தையும் கடுமையாகச் சாடி கனிமொழி எம்பி ஆற்றியுள்ள இந்த அதிரடி உரை, சோசியல் மீடியாவில் தீயாகப் பரவி வருவதுடன் தமிழக அரசியல் களத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
