தொழில்நுட்பம் எந்த அளவிற்கு நம் அன்றாட வாழ்க்கையை எளிமையாக்கியுள்ளது என்பதற்குச் சான்றாக ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வீட்டில் இணையவேகம் கிடைக்காத ‘வைஃபை டெட் ஜோன்’ பிரச்னையால் அவதிப்பட்ட நபர் ஒருவர், நொடிப் பொழுதில் அதைச் சரிசெய்து அசத்தியுள்ளார்.
வெறும் அரை மணி நேரத்தில் யூடியூப் வழிகாட்டுதல் மற்றும் அதிவேகக் டெலிவரி செயலி உதவியுடன் அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 10 வருடங்களுக்கு முன்பு வரை வீட்டில் ஒரு இன்டர்நெட் அல்லது வைஃபை பிரச்னை என்றால், சேவை மையத்தைத் தொடர்புகொண்டு சர்வீஸ் இன்ஜினியர் வரும் வரை பல நாட்கள் காத்துக் கிடக்க வேண்டிய சூழல் இருந்தது.
ஆனால், தற்போதைய நவீன டிஜிட்டல் உலகில், தேவையான தொழில்நுட்ப உபகரணத்தை ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே வீட்டிற்கே கொண்டு வந்து சேர்க்கும் ‘இன்ஸ்டன்ட் டெலிவரி’ சேவைகள் உருவாகிவிட்டன. அதேபோல, எதையும் சுயமாகப் பார்த்துச் சரிசெய்யும் வகையில் யூடியூபில் ஆயிரக்கணக்கான வழிகாட்டுதல் வீடியோக்களும் கொட்டிக்கடக்கின்றன.
இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த நபர், வைஃபை சிக்னலை அதிகரிக்கும் உபகரணத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்து, அது கைக்கு வந்தவுடன் யூடியூப் வீடியோவை பார்த்துச் சில நிமிடங்களிலேயே செட் செய்து முடித்துள்ளார்.
மேலும் “10 வருஷத்துக்கு முன்னாடி இதையெல்லாம் நினைச்சுக் கூட பார்க்க முடியாது” என்று பலரும் வியந்து பாராட்டும் இந்தச் சம்பவம், தொழில்நுட்ப வளர்ச்சியின் அசுர வேகத்தையும், அது சாமானிய மனிதனின் அன்றாடச் சிக்கல்களை எவ்வளவு சுலபமாகத் தீர்க்கிறது என்பதையும் மிகத் தெளிவாக உணர்த்துகிறது.
