மகாராஷ்டிர மாநிலத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ரயில் மீது சிலர் மாட்டுச் சாணத்தை வீசி எறியும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் ரயிலுக்குள் பயணம் செய்து கொண்டிருந்தபோதே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
அந்தக் காணொளியில், இளைஞர்கள் சிலர் ரயில் பாதையின் அருகே நின்றுகொண்டு, வேகமாகக் கடந்து செல்லும் ரயிலின் ஜன்னல்களை நோக்கிக் மாட்டுச் சாணத்தை எறிவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. ரயிலின் உள்ளே பயணிகள் இருந்தபோதிலும், அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
முன்கூட்டியே திட்டமிட்டுப் பயணங்களை மேற்கொண்டு அமைதியாகச் செல்லும் அப்பாவிப் பயணிகள் மீது இதுபோன்ற அருவருப்பான தாக்குதலை நடத்தியது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வேகமாகப் பரவி வருகிறது.
ரயிலில் செல்லும் பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் நடந்து கொண்ட அந்த இளைஞர்களின் பொறுப்பற்ற மற்றும் மரியாதையற்ற செயலுக்குப் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
பொதுச்சொத்துக்கும் பயணிகளுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட இந்த நபர்களைக் காவல்துறை உடனடியாகக் கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
