உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில் காதலனும் காதலியும் கைகோர்த்தபடி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாகப் பெண்ணின் வீட்டார் இருவரையும் ஒரே இடத்தில் நேருக்கு நேர் பார்த்துள்ளனர்.

காதலனுடன் இருப்பதைக் கண்டதும் ஆத்திரமடைந்த குடும்பத்தினர், உடனடியாகப் பெண்ணின் அருகே சென்று காதலனை விட்டு விலகி வருமாறு வலியுறுத்தினர். மேலும் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் காதலி குடும்பத்தினருடன் செல்ல மறுத்து, தன் காதலனை விட்டுப் பிரிய மனமில்லாமல் அவரைக் கட்டியணைத்துக் கொண்டார்.

குடும்பத்தினர் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்தப் பெண் தன் காதலனை விட்டு விலக மறுத்து பிடிவாதமாக இருந்தார். காதலனும் காதலியும் பிரிய மனமின்றி இறுக்கமாகப் பிடித்துக் கொண்டதால், அங்கிருந்த மக்கள் அனைவரும் என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, குடும்பத்தினர் மிகக் கடினமாகப் போராடிப் பெண்ணைக் காதலனிடமிருந்து பிரித்தனர். பின்னர் அவரை வலுக்கட்டாயமாக இருசக்கர வாகனத்தில் அமர வைத்துத் தங்களுடன் அழைத்துச் சென்றனர்.

प्रेमी और प्रेमिका संगमनगरी के लाला बाजार में एक दूसरे का हाथ पकड़ कर भरे बाजार में जा रहे थे। तभी लड़की की परिजनों की नजर उन दोनों पर पड़ी, तभी प्रेमिका के पास पहुंचे और प्रेमी से दूर होने को कहा। जब परिजन लड़की को ले जाने लगे तभी प्रेमिका ने प्रेमी को कसकर जकड़ कर पकड़ लिया।… pic.twitter.com/68ILh6ERfd

— Ashish Paswan (@ashishpaswan0) August 21, 2026

“>

நடுரோட்டில் நீண்ட நேரமாக நடந்த இந்த காதல் ஜோடியின் பரபரப்பான சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகின்றன.