விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டால் பொதுவாகப் பயணிகளுக்குக் கடுப்பும், மன உளைச்சலும், அலச்சலும்தான் எஞ்சும். ஆனால், ஜப்பானில் விமானப் பயணம் ஒன்று ரத்து செய்யப்பட்டதால், அங்குள்ள பயணிகளுக்கு எதிர்பாராத வகையில் ஒரு பிரம்மாண்டமான அதிர்ஷ்டக் கதவு திறந்துள்ளது.

சாதாரணமான ஒரு விமானப் பயணம் ரத்து செய்யப்பட்ட நிகழ்வு, பயணிகளுக்கு ஆடம்பர ஹோட்டல் தங்குமிடம், இலவச உணவு வவுச்சர்கள் மற்றும் பிரீமியம் விமானப் பயணமாக மாறி, எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜப்பானில் ஏற்பட்ட இந்த எதிர்பாராத விமான ரத்தால், விமான நிறுவனம் தனது பயணிகளுக்கு அளித்த உபசரிப்பு மற்றும் இழப்பீட்டு முறைகள் சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்று வருகின்றன. பயணம் ரத்தானதும் பயணிகளைத் தவிக்க விடாமல், உடனடியாக அவர்களுக்கு ஐந்து நட்சத்திர தரத்திலான ஆடம்பர ஹோட்டல்களில் தங்குவதற்கு இலவச வசதிகள் செய்து தரப்பட்டன.

அதுமட்டுமன்றி, அவர்கள் தங்களுக்குப் பிடித்த உணவுகளை உண்பதற்காக பிரத்யேக உணவுக் கூப்பன்களும் வழங்கப்பட்டன. இதோடு முடிந்துவிடாமல், அவர்களின் அடுத்தகட்ட பயணத்திற்காகப் பிரீமியம் வகுப்பிலான மாற்று விமானப் பயணச் சீட்டுகளையும் அந்த விமான நிறுவனம் இலவசமாக வழங்கி அசத்தியுள்ளது.

மேலும் சிரமத்தைச் சந்தித்த பயணிகளுக்கு இத்தகைய சொகுசு அனுபவத்தை வழங்கி, அவர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்த இந்தச் சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. “சேவைக்கும் வாடிக்கையாளர் திருப்திக்கும் ஜப்பான் எப்போதும் ஒரு சிறந்த உதாரணம்” என உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்கள் இந்தச் சம்பவத்தை வியந்து பாராட்டி வருகின்றனர்.

“>