மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய தென்னிந்திய மாநிலங்கள், தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் பாதிக்கப்படக்கூடாது எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வருவது அரசியல் களத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளுக்கு விதிக்கப்பட்ட முடக்கம் முடிவுக்கு வர உள்ள நிலையில், வெறும் மக்கள்தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்வது முறையல்ல என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகத் தென் மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்றும், இதனால் நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைய வாய்ப்புள்ளது என்றும் வாதிடப்படுகிறது.
DMK supporters conveniently skipped the main paragraph!
“The freeze on Lok Sabha seats based on the 1971 Census is approaching its end.
Delimitation based purely on population will penalize Southern states for successfully implementing national population control.”CM Vijay is… pic.twitter.com/V5ZxeBabec
— George (@georgeviews) August 20, 2026
“>
தொகுதி மறுவரையறையால் எந்தவொரு மாநிலத்தின் உரிமைகளும் பிரதிநிதித்துவமும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் விஜய் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
