தமிழகத்தின் முக்கிய நீர் ஆதார உரிமைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பகிர்வு விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ள முடியாது எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகமும் பயனடையும் என்றும், நீர் பங்கீடு என்ற நிலையிலிருந்து நீர் ஒத்துழைப்புக்கு மாற வேண்டும் என்றும் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

நதிநீரைப் முறையாகப் பங்கிடாமல் தென் மாநிலங்களிடையே ஒத்துழைப்புக்கு இடமில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள விஜய், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

“>

 

நதிநீர்ப் பகிர்வுடன் சேர்த்து, தொகுதி மறுவரையறையால் எந்தவொரு மாநிலமும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்கான சட்டபூர்வ உறுதிமொழி வழங்கப்பட வேண்டும் என்றும், ஆன்லைன் மூலமான போதைப்பொருள் விற்பனையைத் தடுத்து நிறுத்தச் சட்ட விதிகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் அவர் முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்