சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,14,160 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,270 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 15567 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,24,536 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 255 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,55,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
