சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 டெல்லி கொண்ட்லி பகுதியில் மொட்டை மாடியில் பட்டம் விட்டுக் கொண்டிருந்த சிறுவன் மீது உயர் அழுத்த மின் கம்பி உரசியதில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொண்ட்லி பகுதியில் சிறுவன் ஒருவன் வழக்கம் போல் மாடியில் நின்று பட்டம் பறக்கவிட்டுக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாகப் பட்டத்தின் நூல் அருகில் சென்ற உயர் அழுத்த மின் கம்பியின் மீது பட்டதால், பயங்கர மின்சாரம் பாய்ந்து சிறுவனுக்குக் கடுமையான தீக்காயங்கள் உண்டாயின. பண்டிகைக் காலங்களிலோ அல்லது விடுமுறை நாட்களிலோ குழந்தைகள் மாடிகளில் பட்டம் விடும்போது அருகில் மின் கம்பிகள் அல்லது உயர் அழுத்த மின்கம்பிகள் இருக்கிறதா என்பதைப் பெற்றோர் தீவிரமாகக் கவனிக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
A serious incident occurred today (15 August 2026) in Kondli, Delhi.
A boy was flying a kite on the terrace when the kite string came into contact with a live electric wire. He suffered severe burns due to the electric shock.
Parents are strongly advised not to allow children… pic.twitter.com/TwJdd02qba
— Aparajite (@amshilparaghu) August 15, 2026
“>
விபத்துகள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதால், மின் கம்பிகளுக்கு அருகில் குழந்தைகள் விளையாடுவதைத் தவிர்க்குமாறு காவல்துறையினரும் மின்வாரிய அதிகாரிகளும் பொதுமக்களுக்குக் கடும் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.
