கடந்த 2025 செப்டம்பர் மாதம் கரூரில் நிகழ்ந்த கோரத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தமிழக அரசு வழங்கிய கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்புகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு இந்த வழ விசாரித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த தீர்ப்புக்குத் தடை விதித்ததுடன், இது தொடர்பாக நோட்டீஸ் பிறப்பித்தும் உத்தரவிட்டுள்ளது. குடும்பத்தின் ஒற்றை வருவாய் ஈட்டும்ாதாரரை இழந்து தவிக்கும் வாரிசுகளுக்கு அரசு உதவி கரம் நீட்டுவதையும், மனிதாபிமான அடிப்படையில் நிவாரணம் வழங்குவதையும் எப்படிக் கேள்விக்குள்ளாக்க முடியும் என்று நீதிபதிகள் காரசாரமாக வாதிட்டனர்.

மனிதாபிமான நிவாரணங்களைச் சமத்துவ விதிகளுடன் ஒப்பிட்டுப் பொதுநல வழக்குகளாக மாற்றுவது முறையல்ல என்றும், துயரச் சம்பவங்களில் அவதிப்படும் குடும்பங்களுக்கு அரசு செய்யும் உதவிகளைப் பொதுநல மனுக்கள் மூலம் எதிர்க்கக் கூடாது என்றும் மூத்த வழக்கறிஞர்கள் தரப்பில் வலுவான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

கடந்த 2025 செப்டம்பரில் கரூரில் நடந்த பெரும் துயர நிகழ்வில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட அந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் காக்கத் தமிழக அரசு சார்பில் வாரிசு வேலைகள் வழங்கப்பட்டிருந்தன.

<a href=”http://

“>

அதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஜூலை 2026-ல் உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.