சர்வதேச சந்தையின் பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப நாள்தோறும் மவுசு மாறிவரும் தங்கம் விலை, இன்று மீண்டும் உச்சத்தை நோக்கி விஸ்வரூபம் எடுத்துள்ளது. நேற்று காலை அதிரடியாக உயர்ந்து மாலையில் சற்று சரிவைச் சந்தித்த தங்கம், இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே கிடுகிடுவென உயர்ந்திருப்பது நகைப்பிரியர்களையும் முதலீட்டாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதன்படி, இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 400 ரூபாய் வரை அதிகரித்து ஒரு சவரன் 1,13,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், முதலீட்டாளர்களின் ஃபேவரைட்டான 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து, ஒரு கிராம் 15,491 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,23,928 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே, தங்கம் விலை எகிறினாலும் வெள்ளி பிரியர்களுக்கு ஒரு நிம்மதியான விஷயமாக, இன்றைய தினம் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையே தொடர்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,60,000 ரூபாய்க்கும் எந்தவிதத் தடையுமின்றி விற்பனையாகி வருகிறது.
